பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் உதவி ஆய்வாளர்

Police Magazine(TamilNews Media Group): திருப்பத்தூர் மாவட்ட U1 -கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.ராணி அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியிலேயே நீண்ட காலமாக காவல் பணி செய்து வருகிறார். அந்த அளவுக்கு மக்களின் நன்மதிப்பைப் பெற்று கண்ணியத்துடன் கடமையாற்றி வருகிறார். மிகவும் கண்டிப்பானவர் என்றும், பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் அதில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதும், அப்பகுதி பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருவதும், என்று இவரை பற்றி எங்கள் திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் தாலுக்கா நிருபர்கள் தெரிவித்த அடிப்படையில் நேரில் சென்று வாழ்த்தி பாராட்ட முற்பட்டோம். ஆனால் ஒரு வழக்கு சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உதவி ஆய்வாளர் ராணி வந்திருந்தபோது அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் ஆசிரியர் மற்றும் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய இணை செயலாளர் பூவே.இராஜசேகரன் உடன் செய்தி குழுவை சார்ந்த பப்லு இருவரும் உயர்நீதிமன்ற வளாகத்தில் சந்தித்து "காவல்துறையின் எழுச்சி நாயகர் DGP திரு.சைலேந்திரபாபு IPS" அவர்கள் இயற்றிய புத்தகத்தை கொடுத்து வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

1 / 1

1.