துப்புரவாளர்களை கௌரவித்த துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி..

ஒரு நாட்டின் தூய்மை அந்நாட்டின் துப்புரவுப் பணியாளர்களின் பொறுப்பிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற அடிப்படையை உணர்ந்த சென்னை "வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர்(Deputy Commissioner) திருமதி.சுப்புலட்சுமி" அவர்கள் சென்னை மண்டலம் நான்கில் பணியாற்றும் துப்புரவாளர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களை போற்றும் வகையில் பாராட்டி மகிழ்ந்தார். மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவாளர்களின் ஊதியம் கவலைக்கிடமான ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் இவர்களை பாராட்டும் இதுபோன்ற நிகழ்வு இவர்களுக்கு மேலும் ஊக்கத்தையும், கடமையாற்றும் பொறுப்பையும் கண்டிப்பாக தரும். அந்த வகையில் துணை ஆணையாளர் அவர்களின் செயல் பாராட்டத்தக்கது.

1 / 1

1.