சென்னை மாநகர காவல் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு..

Police Magazine(TamilNews Group): சென்னை மாநகர காவல்துறை சார்பில் வட சென்னை காசிமேடு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி IPS தலைமையில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுந்தரவதனம் IPS முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் தமிழ் நியூஸ் வடசென்னை மாவட்ட நிருபர் ரேகா குளோரி, மற்றும் சமூக அமைப்பினர்கள், காவல் துறையினர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்வில் சிறுவர் சிறுமியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களிடையே போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது அப்பகுதியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. www.policemagazine.in

1 / 1

1.