காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள் அர்த்தமின்றி திரிபவர்களை வெளுத்துவாங்க..

"கொரோனா நோய்க்கிருமியின் வீரியம்" தெரியாமல் அர்த்தமின்றி விளையாட்டாக சுற்றித்திரியும் மக்கள் நலன் துளியுமில்லாத, மதியிழந்த, "மானங்கெட்ட" மந்தை கூட்டங்களே! அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 144 சட்டம் அதை கடைப்பிடிக்கும் நோக்கத்தோடு இரவு பகல் பாராமல் மக்களை பாதுகாக்க காவல்துறையினரும், நோய் தொற்றிலிருந்து மக்கள் உயிரிழக்காமல் போராடிவரும் மருத்துவர்களும் தங்களின் குடும்பத்தை பாராமல் மக்களுக்கான நலனில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். இதை சற்றும் உணராமல் சுற்றிதிரிகிறீர்களே! உயிரை விட அப்படி என்ன "புடுங்கற" வேலை உங்களுக்கு வந்துவிட்டது. மதிகெட்ட கூட்டங்களே உங்கள் அனைவரிடமும் உலக நடப்பை அறியும் வகையில் ஸ்மார்ட்போன்கள் கையில் உள்ளது. அதில் உலக நாடுகளில் கொரோனாவின் தாக்குதலால் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். இதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்க்கிறீர்களா அல்லது குடும்பத்தை பிரிக்கும் டிக் டாக் ஆப் போன்ற ஒரு "மயிருக்கும்" உதவாத விஷயங்களை பார்த்து வருகிறீர்களா! நீங்கள் வெளியே சுற்றுவதனால் நோய்த்தொற்று பரவாமல் வீட்டுக்குள் அடங்கியிருக்கும் மற்றவர்களுக்கும் அல்லவா அது பாதிப்பு இதை ஏன் உணராமல் திரிந்து வருகிறீர்கள். காவல்துறை எவ்வளவு அன்பாக சொல்ல முடியுமோ சொல்லி வருகிறார்கள் அதையெல்லாம் சிறிதும் நீங்கள் மதிக்கவில்லை. சில தினங்களில் உங்கள் நண்பர்கள், உங்கள் உறவுகள் ஆங்காங்கே செத்து மடியும் தருணம் வரும்போது அடங்கிப் போவீர்கள் அதுவரை திருந்த மாட்டீர்கள்! >காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் அன்போடும் அரவணைப்போடும் 144 தடையை மீறி வருபவர்களுக்கு தோப்புக்கரணம் போடுவது, நோய் குறித்து விழிப்புணர்வு சொல்வது இப்படி எல்லாம் செய்தாள் இந்த மந்தைகளுக்கு புரியாது. பிற மாநிலங்களில் அர்த்தமின்றி திரிபவர்களை வெளுத்து வாங்குவது போல் தமிழக காவல்துறையும் செய்தால், மந்தை கூட்டங்கள் மறைந்துவிடும். சமூக ஆர்வலர்களே இதுபோன்ற உயிரைப் பற்றி கவலைப்படாத மந்தைகளுக்காக ஆதரவு பேசவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். >மக்கள் விரோத திட்டத்தை நிறைவேற்ற போடப்பட்ட 144 அல்ல. இது மக்கள் உயிர்காக்க போடப்பட்ட 144. >>காவல்துறையினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவாளர்கள், சூழ்நிலை உணர்ந்து தொண்டு செய்யும் சமூக ஆர்வலர்கள். நோய் தொற்று யாருக்கும் பரவாமல் வீட்டிலேயே அடங்கியிருக்கும் பொறுப்பான மக்கள் மற்றும் அனைத்தையும் உலகுக்கு வெளிச்சம் காட்டி வரும் ஊடக பத்திரிகையாளர்கள் அத்துணை பேருக்கும் அவர்கள் பாதம் தொட்டு வணங்கி பாராட்டுகிறேன். (சமூக பொறுப்பில்லாத இவர்கள் மீது மானிடச் சமுதாய கோபம் எனவே இழிவான சொற்கள் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.) -பூவே.இராஜசேகரன் ஆசிரியர்-தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின். தேசிய இணை செயலாளர்-அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம்.

1 / 1

1.