போலீஸ் மேகஸின் சார்பாக வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியம்..

கொரோனா நோய் குறித்த அரசின் விழிப்புணர்வு ஓவியத்தை அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் மற்றும் தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின் சார்பாக "விழுப்புரம் மாவட்டம் பனமலை கிராமத்தில்" வரையப்பட்டது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட D8 அனந்தபுரம் காவல்நிலையத்தில் அனுமதி கடிதம், செய்தி குழுவை சேர்ந்த பன்னீர் அவர்களால் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(SUPERINTENDENT OF POLICE ) திரு.ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில், ஓவியம் வரையப்பட்ட சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்திலிருந்து உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வந்திருந்து முன்நின்று பார்வையிட்டனர். அதன்பின்பு ஓவியத்தின் அருகாமையில் வாகனத்தில் செல்பவர்களிடம் காவல்துறை சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதைத்தொடர்ந்து சுகாதார நல அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கிருமிநாசினி கையில் பூச வலியுறுத்தப்பட்டது.

1 / 1

1.