“Singapen Veera Tamilachi” ASP M.HEMALATHA IPS

“Singapen Veera Tamilachi” ASP M.HEMALATHA IPS (Kerala State Malappuram District) கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா-வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ளார். இவர் அம்மாநிலத்தில் பொறுப்பேற்கும் முதல் தருணம் வித்தியாசமாக அமைந்தது. >சார்ஜ் எடுப்பதற்கு முன்னால் காவல் நிலையம் எப்படி இருக்கிறது, அங்குள்ள அதிகாரிகள் எப்படி இருப்பார்கள், புகார் கொடுக்க வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று அவர் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது போல் சென்று சோதனை செய்தார். அதன்பின் இவர்தான் ஏ.எஸ்.பி என்று தெரிந்ததும் அங்குள்ள காவல் துறையினர் அதிர்ந்து போனார்கள். இவர் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கை கண்ணியத்துடன் காத்துவருகிறார். அங்குள்ள பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் சுதந்திரமாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்கள். >ஒவ்வொரு பொதுமக்களின் மகிழ்ச்சியில் ஒவ்வொரு காவல்துறையினரின் வியர்வை இருக்கிறது என்ற இவருடைய கருத்து காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக அமைகிறது.

1 / 1

1.