CERTIFICATE OF APPRECIATION DCP Tr.R.SHIVA PRASAD IPS

Police Magazine(TamilNews Group): Tr.R.Shiva Prasad IPS அவர்கள் விருதுநகர் மாவட்ட ASP-ஆக, மதுரை மாநகர் DCP-ஆக, தற்போது வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் (DCP)-ஆக திறம்பட செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் ரோந்து பணி மேற்கொள்ளும் சுறுசுறுப்பான இளம் வயது காவல் அதிகாரி. இவர் தனது சிறப்புமிக்க காவல் பணியோடு மக்கள் நல பணியையும் பல விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நிகழ்த்தி அப்பகுதி மக்களின் பாராட்டையும் நம்பிக்கையும் பெற்றவர். கனமழை பேரிடர் காலத்தில் மக்களின் பசியாற்ற ஆங்காங்கே காவல் துறை சார்பாக உணவு வழங்கியவர். இளைய தலைமுறைகள் போதை பழக்கத்திற்கு அடிமை பட்டுவிடாமல் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுகளை பொது இடங்கள், கல்வி நிலையங்கள் என பல இடங்களில் நிகழ்த்தியவர். இத்தனை சிறப்புக்குரிய துணை ஆணையாளர் திரு சிவபிரசாத் IPS அவர்களுக்கு தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக பாராட்டி "EXCELLENT POLICE SERVICE' விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1 / 1

1.