“காவல் கரங்கள்’அமைப்பு மூலம் 127 வெளிமாநிலத்தவர்கள் மீட்பு

Police Magazine(TamilNews Media Group): சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் IPS அவர்கள் “காவல் கரங்கள்” என்ற அமைப்பு மூலம் 127 வெளி மாநிலத்தைச் சேர்ந்த, தன் குடும்பத்தை தொலைத்து ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை மீட்டு, அவர்களின் உரிய முகவரியை கண்டறிந்து, ரயில் மூலம் அவரவரை அந்தந்த மாநிலத்திற்கு உட்பட்ட குடும்பங்களுடன் இணைத்து காவல் துறைக்கு பெருமை சேர்த்தார் சென்னை ஆணையர். நூறுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை ஒருங்கிணைத்து அவரவர் குடும்பங்களுடன் இணைக்கும் முயற்சியில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும், உணவும், மருத்துவ சிகிச்சையும் மேலும் ரயிலில் அனுப்பி வைக்கும்போது அவர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது.

1 / 1

1.