பத்திரிகை சம்பந்தப்பட்ட பணிகளுக்கு தடை விதிக்கக்கூடாது காவல்துறையினருக்கு ஆணையர் அறிவுரை..

பத்திரிகை சம்பந்தப்பட்ட எந்த ஒரு பணிகளையும் தடுக்கக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் முனைவர்.திரு.ஏ. கே.விஸ்வநாதன் IPS அவர்கள் காவல்துறையினருக்கு வயர்லெஸ் மூலம் அறிவுறுத்தினார். அத்தியாவசிய பணிகளில் மக்களுக்கு பத்திரிகை நாளிதழ்களை கொண்டுசெல்லும் பணிகளும் முக்கியமாக அடங்கும் எனவே தினசரி நாளிதழ்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கவோ, பறிமுதல் செய்யவோ கூடாது என்றும் நாளிதழ்களை கொண்டு செல்லும் நபர்களுக்கு தடையேதும் இல்லாமல் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் கமிஷனர் அறிவுறுத்தினார். எந்த ஒரு தடை காலத்திலும் ஊடகப் பத்திரிகைகளுக்கு தடையில்லை என்ற கமிஷனரின் அறிவுறுத்தல் ஊடக பத்திரிகையாளர்களிடம் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

1 / 1

1.