கயவர்களுக்கும் காமூகர்களுக்கும் பேருந்தில் ஆப்பு

Police Magazine(TamilNews Group): மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முனைவர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி "நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ்" சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவசர அழைப்புக்கான செயல்பாட்டினை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு முதற்கட்டமாக 500 பேருந்துகளில் இத்திட்டத்தின் கீழ் கருவிகள் பொருத்தப்பட்டு முதல்வர் பொற்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பேருந்துகளில் செயின் அறுப்பு, பிக்பாக்கெட் போன்ற திருட்டுகளையும், சில பேர்களின் பாலியல் சீண்டல்களையும் அறவே தடுக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அவசர கால நேரத்தில் பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கும் பேணிக் பட்டனை அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு எந்த வகையிலும் உடனே பாதுகாப்பு கிடைத்துவிடும். தமிழக முதல்வரின் இத்திட்டம் அனைத்து பொதுமக்களும் பாராட்டும் வண்ணம் அமைகிறது.

1 / 1

1.