காவலர் வீரவணக்க நாள் 2 DGP-s அஞ்சலி

காவலர் வீரவணக்க நாள் அஞ்சலி: 2018 செப்-1ல் இருந்து, 2019ஆகஸ்ட்-31 வரை பணியின் போது இறந்த 292 காவலர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக காவல்துறை இயக்குநர் ஜே.கே.திரிபாதி IPS (Director-General of Police), ரயில்வே காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு IPS (Director-General of Police) இருவரும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலக வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். >காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படும் காரணம்: சீன ராணுவத்தினர் 1959 அக்டோபர் 21ல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அதை அடிப்படையாக கொண்டு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அக்டோபர் 21ல் "காவலர் வீரவணக்க நாள்" அனுசரிக்கப்பட்டுவருகிறது.

1 / 1

1.