திருமணத்திற்கு 1லட்சம் ரூபாயில் சீர் வரிசை கொடுத்த ஆய்வாளர் ராஜேஸ்வரி

கணவன் கைவிட்ட நிலையில் திருமண வயதில் ஒரு பெண் உட்பட, தங்கையும், தம்பியும் மூன்று பேரை பெற்றெடுத்த தாய் குடும்ப பாரம் தாங்க முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சூழ்நிலையில், அவர்களை காப்பாற்றி அறிவுரைகள் கூறி, பாதுகாப்பான இடத்தில் வேலையும் வாங்கி கொடுத்தார் G5தலைமை செயலக காலனியின் "ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி". வாங்கிக்கொடுத்த வேலையும் நாட்களும் மெல்ல நகர, அத்தாய் தன் மூத்த பெண்ணான பிரியதர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வரமும் கிட்ட, பெற்றோராக தன் பெண்ணுக்கு எந்தக் கடமையும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதை உணர்ந்த ஆய்வாளர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு 1லட்சம் ரூபாயில் சீர் வரிசையும், காசோலை பத்தாயிரம் ரூபாயும் தன் சொந்த செலவில் அந்த பெண்ணுக்கு உதவி இருக்கிறார். காவல்துறைக்கு நன்மதிப்பையும், பெருமையும் ஏற்பட செய்திருக்கிறார் ஆய்வாளர் ராஜேஸ்வரி. இவரின் கடமையுடன் தொடர் சமூகப் பணியை பற்றி அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டிருந்தோம். அதற்கு அவர் "சாகும் நேரம் யாருக்கும் தெரியாது. இருக்கும் வரை இல்லாதவருக்கு உதவுவோம் என்ற இவருடைய சொல் மெய்சிலிர்க்க வைத்தது". >இவர் தமிழக டிஜிபி மற்றும் சென்னை கமிஷனர் ஆகியோரிடம் சிறப்பான கடமைக்கும், சமூக பொறுப்பிற்கும் பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 1

1.