தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தொழில்நுட்பம் மற்றும் விரல் ரேகை பிரிவு பயிற்சி நிறைவு விழா
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தொழில்நுட்பம் மற்றும் விரல் ரேகை பிரிவு பயிற்சி நிறைவு விழா
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தொழில்நுட்பம் மற்றும் விரல் ரேகை பிரிவு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்வை DGP Thiru.J.K.Tripathy IPS அவர்கள் தலைமை ஏற்றார். ரயில்வே துறை டிஜிபி Dr.C.Sylendra Babu IPS உட்பட ஏனைய காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி அவர்களுக்கு கவாது அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் 228 பேர், விரல் ரேகை பிரிவு உதவிஆய்வாளர்கள் 179 பேர் ஆகியோர் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி பாடத்திட்டத்தில்: தகவல்தொடர்பு, தற்கால தொழில் நுட்ப முன்னேற்றம், மென்பொருளின் தற்கால வளர்ச்சி முறைகள், கணிணி வழி சைபர் குற்றங்களில் சவால்களை சந்திக்கும் திறன்களை வளர்க்கும் மேலாண்மை பயிற்சிகள், குற்றம் சார்ந்த சட்டங்கள், மத்திய மற்றும் மாநில சட்டங்கள், பணி மேன்மையை கையாள்வது, மனித உரிமையை பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டப்பயிற்சிகள் ஆகியவை முக்கியமானதாக பயிற்சி அளிக்கப்பட்டது.