Honor of Women's Day - Inspector Bhuvaneswari

Police Magazine(TamilNews Media Group): திருவொற்றியூர் H8 காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக இருக்கும் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் சமூகத்தில் குற்றவாளிகளை அறவே இருக்கக்கூடாது, அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெரிதும் கொண்டவர். அதனடிப்படையில் வறுமையின் நிலையில் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் திருடிய சிறுவனை தண்டிக்காமல் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல், அந்த சிறுவனை சிறைக்கு அனுப்பினால் ஒரு குற்றவாளியாக மாறி விடுவான் என்று எண்ணி, தன் சொந்த செலவில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை அந்த சிறுவனுக்கு வாங்கிக் கொடுத்து மனிதநேயமிக்க காவல் ஆய்வாளராக அனைவராலும் புகழப்பட்டவர். இந்த நற்செயலை பாராட்டி இணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் முன்னிலையில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக சான்றிதழும், விருதும் இவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க காவல் ஆய்வாளரை மகளிர் தினத்தன்று சந்தித்தது, அதைப் போற்றும் வகையில் மகளிர் தின விருதும், துணை ஆணையாளர் திருமதி.சுப்புலக்ஷ்மி பற்றிய குறுந்தகடும் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக கொடுக்கப்பட்டது.

1 / 1

1.