Sniper competition for police officers

Police Magazine(TamilNews Media Group): சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டிகளில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, நுண்ணறிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்பு பிரிவு மற்றும் நவீன கட்டுப்பாட்டறை ஆகிய சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சென்னை காவல் ஆணையர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (Headquarters) முனைவர் A.அமல்ராஜ், IPS அவர்கள் மற்றும் W-21 கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.எஸ்.லஷ்மி ஆகியோர் முதல் பரிசை வென்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ் குமார் அகர்வால்,IPS அவர்கள் 2ம் பரிசையும், இணை ஆணையர் (கிழக்கு மண்டலம்) திரு.ஆர்.சுதாகர், IPS அவர்கள் 3ம் பரிசையும் வென்றனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

1 / 1

1.