குண்டுவீச்சில் வீரமரணமடைந்த காவலருக்கு காவல் துறை சார்பாக 86,50,000ரூபாய் நிதி உதவி..

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டால் காவலர் சுப்பிரமணியன் வீர மரணமடைந்தார். மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு.முருகன் தலைமையில் திருநெல்வேலி டிஐஜி திரு.பிரவீன்குமார் அபிநபு IPS மற்றும் திரு.ஜெயக்குமார் SP TUT ஆகியோர் பண்டார விளையில் உள்ள காவலரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் நிதிஉதவி வழங்கினார்கள். காவலர் சுப்பிரமணி மறைந்தாலும் அவரது வீரத்தை தமிழக காவல்துறை வரலாறு என்றும் மறக்காது என்று காவலரை இழந்த குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக ஐஜி திரு.முருகன் ஆறுதல் கூறினார்.

1 / 1

1.