காவல்துறையினர்களுக்கு தமிழக டிஜிபி அதிரடி அறிவுறுத்தல்

Police Magazine(TamilNews Group): திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்(SSI) பூமிநாதன் அவர்கள் ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு 1கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்தும் மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் வேலையும் கொடுக்க தமிழக முதல்வர் அண்மையில் உத்தரவுப் பிறப்பித்த நிலையில், தமிழக டிஜிபி முனைவர் திரு சைலேந்திரபாபு IPS அவர்கள் மறைந்த பூமிநாதன் வீட்டிற்குச் சென்று உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அக்குடும்பத்திற்கு தக்க ஆறுதல் கூறினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி இனி ரோந்து பணிக்கு செல்லும்போது கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும் தேவைப்பட்டால் தற்காப்புக்காக அதை பயன்படுத்தவும் செய்யலாம் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்பதை டிஜிபி செய்தியாளர்களிடம் கூறினார்.

1 / 1

1.