ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில் சுவாமி விவேகானந்தா சேவை மையத்துக்கு மனிதநேய விருது மற்றும் ஊக்கத்தொகை..

Tamil News - Police Magazine: ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில் சுவாமி விவேகானந்தா சேவை மையத்தின் நிறுவனர், இலவச இரவு பாடசாலை நடத்திவரும் கல்விக் கடவுள் திரு.ஹரிகரன் அவர்களுக்கு தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மனிதநேய விருதும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய துணை பொது செயலாளர் மற்றும் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் ஆசிரியர் பூவே.இராஜசேகரன், சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், இன்வெஸ்டிகேஷன் இதழின் துணை ஆசிரியர், தமிழ் நியூஸ் சட்டக்குழு மற்றும் திருவள்ளூர் கூடுதல் மாவட்ட நிருபர் பத்ம வெங்கடேஷ், சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மற்றும் புதுச்சேரி சிறப்பு நிருபர் சுகுமார், சங்கத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் மற்றும் வட சென்னை மாவட்ட தலைமை நிருபர் சரவணன், வடசென்னை மாவட்ட குற்றப்பிரிவு நிருபர் நேவிஸ், செய்தி குழுவான சுபாஷ், தமிழ், முக்கேஷ் மற்றும் தோழமையுடன் "ஐ" மண் தொண்டு நிறுவனர் தோழர் குப்புராஜ் ஆகியோர் கலந்துகொண்ட இந்த இனிய நிகழ்வு மாணவர்களின் கேள்விகளும், பத்திரிகை துறை சார்ந்த உரையாடல்களும் ஒரு கருத்தரங்கம் போல் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் விவேகானந்தா சேவை மையம் சார்பாக நினைவு பரிசு ஒன்று செய்தி குழுக்கு வழங்கப்பட்டது. இறுதியாக மாணவர்கள் அனைவரும் வட்டமாக நின்று அதன் நடுவே செய்தி குழுவான எங்களை நிற்கவைத்து, பூத்தூவி வாழ்த்திய நிகழ்வு எங்கள் அனைவரையும் நெகிழ செய்தது.

1 / 3

1.

Next