சமூக வலைத்தளம் முதல் டிஜிபி வரை பாராட்டு -இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

Police Magazine(TamilNews Group): Accumulating praise for K6 Tp Chathiram Inspector Rajeshwari, உதயா சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்தவர். கனமழை காரணமாக கல்லறையில் தங்கியுள்ள சூழ்நிலையில், மழையில் நனைந்ததால் உடல் நலம் குன்றி மயங்கிய நிலையில் கல்லறை அருகே விழுந்து கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவர் இறந்து விட்டதாக கருதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி முதலுதவி மூலம் அவர் உயிருடன் இருப்பதை அறிந்தார். உடனே தன் தோளில் தூக்கி எப்படியாவது ஒரு உயிரை காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணத்தில் முயன்று, உயிருக்கு போராடிய உதயாவை காப்பாற்றினார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி அநேக மக்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். இதனை அறிந்த காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) முனைவர் சைலேந்திரபாபு IPS அவர்கள் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டி மகிழ்ந்தார். மேலும் இவர் செய்த இந்த செயல் காவல்துறையின் பெருமையை பொதுமக்களுக்கு நிச்சயம் எடுத்துரைக்கும் என்று அவர் பாராட்டு உரையில் தெரிவித்தார். இவரின் சமூக அக்கறை கொண்ட செயல்கள் யாவும் நாங்கள் பல ஆண்டுகளாக கண்டு வருகிறோம். இத்தகைய செயல்களை கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு இவரின் சேவைகள் எண்ணற்றவைகள் ஆகும். ஏற்கனவே தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக Excellent police service award கொடுத்து அவரை ஊக்குவித்து பாராட்டினோம் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 2

1.

Next