Inspector Jayalakshmi who regularly helps out every year

Police Magazine(TamilNews Media Group): Inspector Jayalakshmi:1986ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் முதல் நிலை காவலராக பணியமர்த்தப்பட்டவர். தொடர்ந்து காவல் பணியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பில் இருந்தபோது 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என, எண்ணற்ற வழக்குகளில் குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி யாருக்கும் அஞ்சாமல் தன் பொறுப்பான காவல் பணியை மனசாட்சியோடு ஆற்றியவர். ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் பொறுப்பில் இருந்தபோது போலீஸ் மேகஸின் சார்பாக நட்பு ஏற்பட்டது. தற்போது D8 Kasturi Bagh Gandhi Hospital Police Station Inspector-ஆக பொறுப்பில் உள்ளார். புறக்கணிக்கப்பட்ட ஆதரவற்றோர்களை அரவணைக்கும் குணம் கொண்டவர். அதனால்தான் வருடந்தோறும் பொங்கல் நன்னாள் அன்று கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ளம் முதியோர் காப்பகத்தில் முதியவர்களுக்கு உணவளித்து, புத்தாடை வழங்குவது இவருடைய வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆய்வாளரின் தொடர் நல்லுதவிகளை பாராட்டும் வகையில் காப்பகம் சென்று போலீஸ் மேகஸின் சார்பாக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

1 / 2

1.

Next