புதுவை மாநிலத்தில் ஒரு போலீஸ் பெண் சிங்கம்

Police Magazine(TamilNews Media Group): புதுவை மாநிலத்தில் ஒரு போலீஸ் பெண் சிங்கம் தனது காவல் கடமையை செம்மையாக ஆற்றி வருகிறார். Dr.RACHNA SINGH P.P.S M.Sc., M.A., Ph.D., MBA (Superintendent of Police - Puducherry) அவர்கள் சில சமயங்களில் இருசக்கர வாகனத்திலேயே சென்று தனது காவல் அலுவலை செய்து வருகிறார். புகாரின்பேரில் வழக்கு விசாரணையை தள்ளிப்போடாமல் உடனுக்குடன் தீர்வை கண்டு வருகிறார். கிருமிநாசினிகள், முகக் கவசங்கள் என பாதுகாப்பு உபகரணங்களை தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் மக்களுக்கும், அங்கு பணிபுரியும் காவல் துறையினருக்கும் பயன்படும் வகையில் அமைத்து வருகிறார். இரவுப் பணியின் போது துப்புரவு பணியில் ஈடுபடும் துப்புரவாளர்களுக்கு முகக் கவசங்கள், அவர்கள் ஊக்கமாக பணிபுரிய சூடான தேநீரும் கொடுத்து வருகிறார். காவல்துறையில் தன்னுடன் பணியாற்றும் ஒவ்வொரு காவல்துறையினரிடமும் அன்போடும் பண்போடும் நட்போடும் பழகி வருகிறார். காவல் பொறுப்பில் ஆற்றல் மிகுந்த, துடிப்புமிக்க ஒரு போலீஸ் பெண் சிங்கம் இவர்.

1 / 2

1.

Next