Honor of Women's Day - DCP Subbulakshmi CD Release

Police Magazine(TamilNews Media Group): மகளிர் தினத்தை போற்றும் வகையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி அவர்களது கொரோனா தடுப்பு நாட்களின் காவல் துறை சார்ந்த சிறப்பான பணியினை தொகுத்து, அதை பாராட்டும் வகையில் "DC vs Corona" என்ற தலைப்பில் "குறுந்தகடு" மகளிர் தினத்தன்று வெளியிடப்பட்டது. பின்பு மகளிர் தின நினைவாக விருதும் வழங்கப்பட்டது. மேலும் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளராக சிறப்பான காவல் பணி ஆற்றியமைக்காக அதை பாராட்டும் பொருட்டு "Excellent Police Service" சான்றிதழும் கொடுக்கப்பட்டது. தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் ஆசிரியர் மற்றும் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய துணை பொதுச் செயலாளர் பூவே.இராஜசேகரன், வடசென்னை மாவட்ட நிருபர் மற்றும் AIPMA வடசென்னை மாவட்ட செயலாளர் M.சரவணன், திருவள்ளூர் மாவட்ட நிருபர் L.பிரபாகரன், வடசென்னை மாவட்ட கூடுதல் நிருபர் K.கங்கா ஆகியோர் "தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின்" சார்பாக இந்நிகழ்வை நிகழ்த்தினர்.

1 / 3

1.

Next