ஒரு மாத ஊதியத்தை கொரோனா மக்கள் பணிக்கு நிவாரணம் வழங்கிய திரு.மயில்வாகனன் IPS

கொரோனா கிருமி நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(Superintendent of Police) திரு.மயில்வாகனன் IPS அவர்கள் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை அம்மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்களிடம் நன்கொடை நிவாரண நிதி அளித்தது சமூக வலைதளங்களில் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்து வருகிறது. இது குறித்து அவர் "Pleasure in serving the nation in this pandemic period" (நோய்த்தொற்று பரவும் இத்தருணத்தில் நாட்டிற்கு சேவையாற்றுவது மகிழ்ச்சி) என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். >திருச்சி மாவட்ட "துணை ஆணையாளராக" பொறுப்பில் இருந்த சமயத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களிடையே வன்முறை ஏதும் நிகழாமல் நல்ல முறையில் காவல் கடமையாற்றிய பெருமையும், அம்மாவட்டத்தில் நேர்மையுடன் சிறப்பான காவல் பணியாற்றியமைக்காக போலீஸ் மேகஸின் மற்றும் தமிழ் செய்தி ஊடகம் சார்பாக திருச்சி மாவட்ட நிருபர் சௌபர்ணிகா நேரில் சென்று அவரை பாராட்டிய நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

1 / 1

1.