போலீஸ் மேகஸின் சார்பாக விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டதற்கு DC திருமதி.சுப்புலட்சுமி பாராட்டி ஊக்குவித்தார்..

பொதுமக்களுக்கு கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் மற்றும் தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின் சார்பாக வட சென்னை ஆர்.கே நகர் பகுதியில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. இந்நிகழ்வை வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர்(Deputy Commissioner) திருமதி.சுப்புலட்சுமி அவர்கள் முன்நின்று பார்வையிட்டார். இவருடன் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார், H5ஆய்வாளர் சரவணன், RK நகர் ஆய்வாளர் ஆனந்தராஜ் ஆகியோர் Personal Protective Equipment (PPE suit) அணிந்து பார்வையிட்டனர். அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய இணை செயலாளர் மற்றும் தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின் ஆசிரியர் பூவே.இராஜசேகரன் துணை ஆணையாளர் அவர்களை இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்காக வரவேற்று முன்னிலைப் படுத்தினார். மேலும் துணை ஆணையாளர் அவர்கள் ஓவியக் கலைஞர்கள் உட்பட அனைவரையும் பாராட்டி ஊக்குவித்தார்.

1 / 3

1.

Next