சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள காவல் சமுதாய நலக்கூடத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களின் சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனைகளை நேரடியாக விவாதிக்கும் வகையில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை பெருநகர காவல்த்துறை ஆணையர் A.K.விஸ்வநாதன் IPS தலைமை ஏற்றார். மேலும் இந்நிகழ்வில் வடக்கு கூடுதல் ஆணையாளர் தினகரன் மற்றும் வடக்கு மண்டல இணை ஆணையாளர் கபில் குமார் சிசாரட்கர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்கள் அப்பகுதி குறித்த பிரச்சனைகளை மனுக்களாக அளித்தனர். பின்பு செய்தியாளர் சந்திப்பில் சென்னை காவல்த்துறை ஆணையர் புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

1 / 1

1.