100ல் சென்றால் 108வரும் வித்தியாசமான அறிவுரை

TamilNews - Police Magazine: மதுரை ஊமச்சிகுளம் போக்குவரத்து ஆய்வாளர் திரு மணி அவர்கள், அதிவேகமாக இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு "100ல் சென்றால் 108வரும்" போன்ற பல வித்தியாசமான அறிவுரைகளை பொதுமக்கள் எளிதில் கவரும் வண்ணம் அறிவுறுத்தி வருகிறார். வழக்கறிஞர்கள், பத்திரிகை ஊடகத்துறையினர் என்று எவராக இருந்தாலும் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டி யாரிடமிருந்தும் நீங்கள் தப்பினாலும் சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் கண்டிப்பாக விபத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற இவரின் பொதுவான அறிவுரையை பொதுமக்கள் வரவேற்கின்றனர். இவர் காவல்துறை பணியில் சாலை ஓரங்களில் செடிகள் நட்டு அதை அவ்வப்போது பணி நேரத்தில் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார். பல்வேறு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நிகழ்த்தி பொதுமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவ்வாறு எங்கள் மதுரை செய்தியாளர்கள் தகவல் சேகரித்ததை அடுத்து, மதுரை ஊமச்சிகுளம் சென்று, பொறுப்பான போக்குவரத்து ஆய்வாளரை அவர் பணியில் இருக்கும் சமயத்தில் நேரில் சந்தித்து "தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக EXCELLENT POLICE SERVICE AWARD" வழங்கப்பட்டது.

1 / 1

1.