Radio City Citizen Award for Chennai Metropolitan Police Commissioner

Police Magazine(TamilNews Media Group): சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்கள் உத்தரவிட்டதின்பேரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" மூலம் காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் கடத்தல், வைத்திருந்தது மற்றும் விற்றது தொடர்பாக 2,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,384 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 23,868 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக 84 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போதைப் பொருளுக்கெதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு, போதை பொருள் நடமாட்டத்தை அறவே ஒழித்த காவல்துறையை பாராட்டும் வகையில் "ரேடியோ சிட்டி பண்பலைவரிசையின் (FM 91.1 MHz)" குழுவினர் சென்னை பெருநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து பாராட்டி "சிட்டிசன் அவார்டு" என்ற சிறப்பு கேடயம் வழங்கினர்.

1 / 1

1.