காலில் காலணி கூட இல்லாமல் BA படித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டும் சிவாவுக்கு பாராட்டு..

2020 அன்று வழக்கமான காவல்துறை செய்திகள் குறித்து திருச்சி மாவட்ட SP-யை சந்திக்கும் தருணத்தில் திருச்சி பேருந்து நிலையம் அருகே காலில் காலணி கூட இல்லாமல் ஆட்டோ ஓட்டிக்கொண்டு BA Economics படித்துக்கொண்டிருந்த சிவா என்பவரை கண்டு, அவரை ஊக்குவிக்கும் பொருட்டு SP-யிடம் அழைத்துச் சென்று ஆட்டோ ஓட்டுநரை ஊக்குவித்து சிறப்பு செய்யப்பட்டது. அதற்காக அன்றைய தினம் SP-யிடமிருந்து பாராட்டும் பெறப்பட்டது. 2021 தற்போது அதே வழக்கமான காவல்துறை செய்திகள் குறித்து அதிகாரிகள் சந்திப்பின்போது திருச்சியில் அந்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. அதோடு அவர் மேலும் படிப்புக்கான உதவிகள் செய்ய உறுதி அளிக்கப்பட்டது. -TamilNews Media - Police Magazine.

1 / 1

1.