Thozhi to help repair sexually distorted minds | சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் தோழி திட்டம் அறிமுகம்..

Police Magazine(TamilNews Media Group): சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களின் தலைமையில் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான நகரம் சென்னை என்பதை, சென்னை பெருநகர காவல்துறை உணர்த்தி இருக்கிறது. அதனடிப்படையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களின் சிதைந்த மன நிலைமையை மாற்ற "தோழி திட்டம்" என்ற சென்னை பெருநகர காவல்துறையின் செயல்பாடு மிகவும் வரவேற்க தக்க ஒன்று. பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது பதிக்கப்படும் சமுதாய முத்திரையை களைந்து, அவர்களிடம் முறையாக அணுகி, நெருங்கிப் பழகி, அவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களின் தேவைகளறிந்து அதை நிறைவு செய்ய முழுமூச்சுடன் செயல்பட்டு, பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு விபத்து அதை முறியடிப்பதே தோழி திட்டத்தின் முக்கியமான குறிக்கோள்.

1 / 1

1.