சென்னை கமிஷனர் விபத்தான காவலருக்கு ஆறுதல்

Police Magazine(TamilNews Group): E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் செந்தில்குமார் தினந்தோறும் ரோந்து பணியை சைக்கிளில் செல்வது வழக்கம். இந்நிலையில் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் இவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த காவலர் செந்தில்குமாரை, ஆலந்தூர் காவல் குடியிருப்பிற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் IPS அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் இவர் சைக்கிளிலேயே ரோந்து பணியில் ஈடுபடுவதால் விபத்தில் உடைந்துபோன சைக்கிளுக்கு பதிலாக புதிதாக ஒன்றையும் வாங்கித்தந்தார். அதைத் தொடர்ந்து குடியிருப்புகளில் உள்ள காவலர் குடும்பங்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

1 / 1

1.