குழந்தைகள் நேய மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் ஆன்லைன் மூலம் துவக்கி வைத்தார்

Police Magazine(TamilNews Media Group): சென்னை பெருநகரத்தில் அமைந்துள்ள 35 மகளிர் காவல் நிலையங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தைகள் நேய மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் ஆன்லைன் மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் திருமதி.ஜெயலட்சுமி உடன் இருந்தார். >புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் உடன் அழைத்து வரும் குழந்தைகள், பாதிக்கப்பட்ட சிறு வயது குழந்தைகள் காவல் நிலையத்திற்கு வர நேர்படுமேயானால் அவர்களுக்கு எந்தவித குழப்பமும், தயக்கமும், அச்சமும் ஏற்படாத வண்ணம் அவர்களின் மனநிலை இருக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்திற்கும் வழங்கப்பட்டது.

1 / 1

1.