Strict but compassionate - Ins Kannaki

சென்னை பெருநகர காவல் ஆணையர் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு மணலியில் உள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தை சேர்ந்த (Police Boys Club) நபர்களுக்கு எண்ணூர் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில், M-6 மணலி காவல் ஆய்வாளர் திருமதி.கண்ணகி தீபஒளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கியது மட்டுமல்லாமல் அவர்களுடன் சேர்ந்து தீபஒளி நன்னாளை கொண்டாடிய நிகழ்வு மிகவும் வரவேற்க தக்க ஒன்று. இதில் மணலி காவல் ஆய்வாளர் திருமதி.கண்ணகி மிகவும் கண்டிப்பானவர், நடுநிலை தவறாதவர் என்று எனக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒன்று. ஆனால் கருணையும் உடன் கொண்டவர் என்பது இந்நிகழ்வுக்குப் பிறகு தான் அறிந்தேன். -பூவே.இராஜசேகரன்.

1 / 1

1.