Honor of Women's Day - Inspector Rajeshwari

Police Magazine(TamilNews Media Group): G5 தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் தொடர்ந்து நான்கு வருடத்திற்கு மேல் இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பொதுவாக போலீஸ் ரோந்து பணியில் வரும்பொழுது கூட்டமாக நிற்கும் மக்கள் கலைந்து செல்வதை பார்த்திருப்போம், ஆனால் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஜீப்பில் ரோந்து பணியில் வரும்பொழுது கூட்டமாக மக்கள் ஜீப்பை சூழ்ந்துகொண்டு ஆய்வாளர் நமக்கு எண்ணக் கொண்டு வந்திருக்கிறார், அவரிடம் என்ன உதவி கேட்கலாம் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் ரோந்து வண்டியை சூழ்ந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு அப்பகுதி மக்களின் பேரன்பை பெற்றவர் ஆய்வாளர் ராஜேஸ்வரி. இவருடைய மனிதநேயத்தையும், சமூகப் பொறுப்பையும் என்றுமே அளவு கோடிட்டு காண்பிக்க முடியாது. அதேபோல் இவரின் நற்செயல்களை செய்திகளாக வெளியிடாத பத்திரிகைகளே கிடையாது. அப்பகுதியில் ரவுடியாக திரிந்து வந்த இரண்டு பேர்களை வழக்கறிஞராக மாற்றிய பெருமை ஆய்வாளர் ராஜேஸ்வரியே சாரும். இவரால் காவல்துறை பலமுறை பெருமை கொண்டிருக்கிறது. பல விருதுகளையும், சான்றிதழ்களையும் சமூக ஆர்வலர்களிடமிருந்தும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமிருந்தும் வாங்கிக் குவித்தவர். காவல் துறை சார்ந்த நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற பல போட்டிகளில் வென்று காட்டி பல பதக்கங்களை கைப்பற்றியவர். சட்டவிரோதமாக பிடிபடும் பொருளுக்கும், பேர்களுக்கும் எந்தவித சிபாரிசுகளையும் ஏற்றுக்கொள்ளாத பல வழக்குகளை பொட்டுக் குவித்த கண்ணியமிக்க காவல்துறையின் ஆய்வாளர் இவர். இத்தகையவரை மகளிர் தினத்தன்று சந்தித்து, மகளிர் தின வாழ்த்து சொல்லும் வகையில் மகளிர் தினம் விருதும், அவருக்கு அதிகம் பிடித்த அப்துல் கலாம் நூலும் "தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின்" சார்பாக கொடுக்கபட்டது.

1 / 1

1.