வாலிபரின் உயிரை மீட்ட ஆய்வாளர் மற்றும் குழுவிற்கு சென்னை ஆணையர் பாராட்டு..

Police Magazine(TamilNews Media Group): நிவர் புயல் ஏற்பட்ட தருணத்தில் புயலின் தாக்கத்தால் மக்களை பாதுகாக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த G5 தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி மற்றும் அவரது காவல் குழுவும், இடியும் நிலையில் உள்ள வீடுகளிலிருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு தங்க வலியுறுத்தி, அதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்து வந்தனர். தொடர்ந்து வீடுகளில் நீர் புகுந்துள்ளதா என்று கவனித்தும், பாதிக்கப்பட்டவர்களின் உணவுக்கான சில வசதிகளையும் செய்து கொடுத்து வந்த நிலையில், சாமிதாசபுரம் என்ற இடத்தில் இடியும் நிலையில் உள்ள ஒரு பழமையான வீட்டில் வெளியேற முடியாமல் வாலிபர் ஒருவர் தவித்து வந்ததை கண்ட ஆய்வாளரும் குழுவும் உடனே விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கொண்டுவந்த மறுகணம் வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. பின்பு வாலிபர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டார். வாலிபரை மீட்ட ஆய்வாளர் உடன் பணிபற்றிய காவல்துறையினருக்கு அப்பகுதியில் பாராட்டு மழை பொழிந்தது. வாலிபரின் உயிரை காப்பாற்றிய ஆய்வாளர் மற்றும் அவர் சார்ந்த குழுவிற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்கள் நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி கொடுத்து பாராட்டினார்.

1 / 1

1.