காவல்துறை கண்டறிந்த 1193 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்க வழிவகை செய்தார் ஆணையர்..

சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவினர் செல்போன் திருட்டு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு மொத்தம் 1,193 செல்போன்களை கண்டறிந்தனர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்கள், கைப்பற்றிய செல்போன்களில் 240 செல்போன்களை புகார் அளித்த உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மீதம் கண்டறியப்பட்டுள்ள செல்போன்கள் அந்தந்த காவல் மாவட்ட உயரதிகாரிகள் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

1 / 1

1.