Police Magazine(TamilNews Media Group):
Automatic number-plate recognition (ANPR) எனப்படும் அதிநவீன கேமராக்களை பொருத்துதல் நிகழ்வு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கானாத்தூர் ஆகிய பகுதிகளில் முதல்கட்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் Dr.A.K.Viswanathan, IPS அவர்கள் துவக்கி வைத்து அதன் செயல்பாட்டை பற்றி விவரித்தார். இந்த அதிநவீன கேமராக்கள் சாலையில் செல்லும் வாகங்களின் பதிவு எண்களை படம்பிடித்து அதன் உரிமையாளரின் விவரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் திறன் கொண்டது. இதனால் குற்றச்செயல்கள், வாகன விதி மீறல்கள், விபத்துகள் உள்ளிட்டவைகள் நிகழும் தருணத்தில் வாகன உரிமையாளர்களையும் விவரங்களையும் எளிதில் அடையாளம் காண முடியும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைந்திருக்கிறது என்றும் காவல் ஆணையர் குறிப்பிட்டார். சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நன்கொடை வழங்கிய நபர்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் அவர்கள் காவல்துறையினருக்கும், நன்கொடை வழங்கிய நபர்களுக்கும் தானே பரிமாறி விருந்து உபசரிப்பு செய்தார்.