குற்றங்களை தடுக்க திருநங்கைகளுக்கு உரிய ஆலோசனை JC & DC தலைமையில் வழங்கப்பட்டது..

தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் அடிக்கடி நிகழும் குற்றச் செயல்களை தடுக்க சென்னை வடக்கு இணை ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் தலைமையில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி அவர்களின் ஆலோசனைப்படி சுனாமி குடியிருப்பு குற்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று புதுவண்ணாரப்பேட்டை காவல் சமூகநல கூடத்தில் நடத்தப்பட்டது. இதில் குடியிருப்பில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளை அழைத்து குடியிருப்புகளில் குற்றங்களை தடுக்க காவல்துறைக்கு உதவுமாறு திருநங்கைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட திருநங்கைகள் அனைவருக்கும் புடவைகள், மளிகை பொருட்கள் காவல்துறை சார்பாக கொடுக்கப்பட்டது. திருவொற்றியூர் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் மற்றும் ஆய்வாளர்கள் ஆரோக்கியராஜ், புவனேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.

1 / 1

1.