தமிழக முதல்வர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

Police Magazine(TamilNews Group): மாண்புமிகு தமிழக முதல்வர் முனைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 29.9.2021 நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தர்மபுரி வழியாக பயணித்துக் கொண்டிருந்தபோது இரவு 8.15 மணிக்கு தர்மபுரியை அடுத்த அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் அளிக்கும் புகாரின்பேரில் காவல்துறை சார்பாக நடவடிக்கை எடுத்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதன் பின்பு அருகில் உள்ள காவல் குடியிருப்புக்கு சென்று அங்குள்ள காவல் துறையினரின் குழந்தைகளிடம் உரையாடினார். அக்குழந்தைகள் பூங்கா அமைத்து தர முதல்வரிடம் வலியுறுத்தியதால் உடனே அதன் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.

1 / 1

1.