மத்திய தேர்வாணையமும், தமிழக முதல்வரின் உத்தரவும் கரை படியாத ஒருவர் டிஜிபியாக தேர்வு

பொதுவாக டிஜிபி பதவி ஏற்பு என்றால் பத்திரிகை ஊடகங்களில் வெளியாகி மக்களுக்கு இயல்பான ஒரு செய்தியாக இருக்கும். ஆனால் திரு சைலேந்திரபாபு IPS அவர்களின் பதவி ஏற்பு என்பது பொது மக்களால் பெரிதும் வரவேற்கப்பட கூடிய ஒரு செய்தியாக அமைகிறது. அந்த அளவுக்கு பொது மக்கள் மட்டுமல்லாது காவல்துறையினர்கள், அரசியல்வாதிகள் என்று பல பேர்களின் மனதில் இடம் பிடித்தவர். மத்திய தேர்வாணையத்தின் ஒப்புதல் மற்றும் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தமிழகத்தின் டிஜிபியாக கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் முனைவர் திரு சைலேந்திரபாபு IPS அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். >இவர் மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளி, அப்துல்கலாமின் இளைஞர்களின் நாளைய கனவை நிறைவேற்றும் காவல்துறை நாயகர், புத்தக எழுத்தாளர், குடியரசுத் தலைவர் பதக்கம், பிரதமர் பதக்கம், முதல்வர் பதக்கம் என எண்ணற்ற பதக்கங்களையும் விருதுகளையும் குவித்தவர், அதிகாரம், அரசியல் குறுக்கீடு என எதற்கும் அஞ்சாது மக்களுக்கான பாதுகாப்பு பணியை திறம்பட ஆற்றுபவர். சட்டத்தை மீறுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க, மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க தமிழக அரசு முனைப்புடன் இருக்கிறது என்பது இவர் பொறுப்பேற்றதிலிருந்தே தெரிகிறது. மக்களின் பேரன்பை பெற்ற காவல்துறை நாயகராக திகழும் என் மரியாதைக்குரிய முனைவர் திரு சைலேந்திரபாபு IPS அவர்கள் டிஜிபியாக பொறுப்பேற்றதற்கு "தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின்" சார்பாக மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். -பூவே.இராஜசேகரன்.

1 / 1

1.