ஆட்டோ ஓட்டுனர் சிவமன்ராஜா நிலைப்பாட்டினை வெளிப்படுத்திய போலீஸ் மேகஸின் ஆசிரியருக்கு எஸ்.பி பாராட்டு..

வழக்கமான காவல்துறை குறித்த செய்திகள் மற்றும் மரியாதை நிமிர்தத்தின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் "திரு.ஜியாவுல் ஹக் IPS" அவர்களை சந்திக்க அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய இணை செயலாளர் மற்றும் தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின் ஆசிரியர் பூவே.இராஜசேகரன் திருச்சி சென்றிருந்த தருணத்தில், தங்கியிருந்த விடுதிக்கு வெளியே ஒரு ஆட்டோ ஓட்டுனர் கையில் புத்தகத்தை கொண்டு படித்திருந்ததை கண்டு, அவரிடம் சென்று கேட்க, BA Economics திருச்சி பெரியார் E.V.R கல்லூரியில் படிப்பதாக அவர் தெரிவித்தார். காலில் காலணி கூட இல்லாமல் வறுமையின் நிலைமையில் தன் குடும்பத்திற்காக படித்துக்கொண்டு பகுதிநேர ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிகிறார் என்பதை அறிந்து, பெருமிதத்துடன் அவரை பாராட்டி, எஸ்பியை சந்திக்கும் அத்தருணத்தில் ஆட்டோ ஓட்டுனர் சிவமன்ராஜாவையும் அழைத்துச் சென்று எஸ்பியிடம் நிலைமையை எடுத்துச் சொல்ல, எஸ்பி அவர்கள் ஓட்டுனரின் நிலமை புரிந்துகொண்டு அவரை ஊக்குவிப்பதற்காக தன் பாதுகாப்புக் காவலர்களை நூலகம் சென்று புத்தகம் வாங்கி வரச் சொல்லி, English grammar, English to Tamil dictionary கொடுத்தார். இதனுடன் ஊக்கத்தொகையாக 5ஆயிரம் ரூபாய் ஓட்டுனர் சிவமன்ராஜாவுக்கு அன்பாக வழங்கினார். மேலும் "வறுமையில் படிப்பவர் மட்டும்தான் உயர் நிலைக்கு வரமுடியும்" என்று, பயின்று கொண்டே பணி புரியும் ஓட்டுநர் சிவமன்ராஜாவை வாழ்த்தினார். >மேலும் ஆசிரியர் பூவே.இராஜசேகரனை தங்களின் செயல் "சமூக அக்கறையை கொண்டு நகர்கிறது" என்றும் பாராட்டினார்.

1 / 3

1.

Next