கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை

Police Magazine(TamilNews Group): புதுவண்ணாரப்பேட்டை H 5காவல் நிலையத்திற்கு உட்பட்ட சரகத்தில் வெங்கடேச அலி தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் குடியிருந்த பெற்றோர்கள் மகன் உட்பட 3 பேர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். கணவன் சிவாஜி, மனைவி வனிதா, மகன் வெற்றி ஆகிய மூவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சிவாஜி என்பவர் டெய்லர் தொழில் செய்து வந்துள்ளார் தொழில் சரியாக போகாததால் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அடிக்கடி வாங்கிய பணம் திரும்ப தரமுடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் கந்துவட்டி கயவர்களின் தொந்தரவு அதிகமானதால் மனமுடைந்த சிவாஜி உட்பட்ட குடும்பத்தார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், மகன் வெற்றி இறந்து கிடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு சம்பந்தமாக துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என துணை ஆணையாளர் திரு சிவ பிரசாத் IPS அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 / 1

1.