மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடும் பெண் கும்பலை பிடித்த ஆய்வாளருக்கு கமிஷனர் பாராட்டு..

Police Magazine(TamilNews Media Group): சென்னை மாநகரில் மூதாட்டிகளை குறிவைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடும் வெளிமாவட்ட பெண் கும்பலை பிடிக்க, சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், வடக்கு கூடுதல் ஆணையாளர், தற்போது வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் கூடுதல் பொறுப்பு வகிக்கும் திரு.ஏ.அருண் IPS அவர்களின் அறிவுரைப்படி, திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து குறுகிய நாட்களில் கைவரிசை காட்டிய பெண் கும்பலை கூண்டோடு பிடித்து அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை பாராட்டும் விதமாக ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட தனி படையினரை சென்னை மாநகர ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார்..

1 / 1

1.