A night patrol with SP Tamil News - Police Magazine team

புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர்(SP) Dr.RACHNA SINGH P.P.S - M.Sc., M.A., Ph.D., MBA அவர்களுடன் ஒருநாள் இரவு ரோந்து பணியில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் குழு சென்றிருந்து, எஸ்.பியின் சிறப்பான காவல் பணியினை பதிவு செய்தோம். ஆற்றல் மிகுந்த எஸ்.பி அவர்கள் தனக்கு கீழ் பணியாற்றும் ஒவ்வொரு காவல்துறையினரிடமும் அன்போடும் நட்போடும் பழகி, இரவு ரோந்து பணியில் இருக்கும் ஒவ்வொரு காவல்துறையினரையும் ஊக்குவிக்கிறார். கொடி கட்டிய அரசியல்வாதி வாகனமாக இருந்தாலும் கூட அந்த வாகனத்தை சோதனையிடுகிறார். இரவு நேரத்தில் காரணத்தோடு வரும் மக்களிடையே அன்பான விசாரணை, தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களிடம் கடுமையான விசாரணையோடு பணி செய்து வருகிறார். ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் சென்று அச்சமயம் பதிவான வழக்குகளைப் பற்றி விசாரிக்கிறார். காவல் பணியில் அவருடைய அனுபவங்களையும், அவர் சந்தித்த வழக்குகளையும் பற்றி எங்களிடம் பகிர்ந்து கொண்டார். காவல்துறை செய்திகள் குறித்து எஸ்.பி அவர்களுடன் இரவு ரோந்து பணி அலுவலில் இருந்தது மகிழ்ச்சியான தருணமாக அமைகிறது. -TamilNews Media Police Magazine.

1 / 4

1.

Next