100 பக்கத்தை கொண்ட பத்திரிகையாக இருந்தாலும் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செய்திகளை பதிவிட கொள்ளாது..

Police Magazine(TamilNews Media Group): 100 பக்கத்தை கொண்ட எந்த ஒரு பத்திரிகையாக இருந்தாலும் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செய்திகளை பதிவிட கொள்ளாது. ஆம் அத்தனை சிறப்புக்குரிய செயல்களை தனது காவல் பணியோடு- அளவற்ற சமூகப் பணியும், அக்கறையான அணுகுமுறையும், என்றும் சிரித்த முகம், அனைவரிடமும் அன்பான மனம், கடமையில் சிங்க குணம், அரசியல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் நடுநிலை தவறாத சிங்கப்பெண் திருமதி.ராஜேஸ்வரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் இந்நாள் முதல்வர் எடப்பாடி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் என அனைவரிடமிருந்து விருதுகளையும், சான்றிதழ்களையும் குவித்தவர். Central Crime Branch ஆய்வாளராக திறம்பட பொறுப்பாற்றியவர். தற்போது G5-தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்பாற்றி வருகிறார். இல்லை என்று வரும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்கிறார். வசதி வாய்ப்பின்றி திருமணம் செய்த பெண்களுக்கு சீர் வரிசையாக தனது சொந்த செலவில் 2 லட்சம் ரூபாய் வரை சீர் கொடுத்த பெருமை ஆய்வாளரை சாரும். இளைஞர்களை ஊக்குவிக்க விளையாட்டு உபகரணங்கள், ஆதரவற்றவர்களை தேடி சென்று நல் உதவிகள், பசிக்கு கையேந்துபவர்களை அன்பு கரம் கொண்டு அரவணைத்தல், ஜீவராசிகளின் பசியை போக்குதல் இப்படி எண்ணற்ற மக்கள் சேவையை தனது காவல் பணியில் இருந்து செய்து கொண்டு மனிதநேயத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஊடகமும், பத்திரிகையும் ஆய்வாளர் ராஜேஸ்வரியை அறியாது இல்லை. இத்தகைய மாண்புக்குரியவரை பாராட்டும் வகையில் தமிழ் நியூஸ் மற்றும் போலீஸ் மேகஸின் சார்பாக பாராட்டு சான்றிதழும் அவர் ஆற்றிய தொண்டினை மதிக்கும் வண்ணம் விருதும் வழங்கப்பட்டது.

1 / 4

1.

Next