ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் IPS அவர்களுக்கு குவிந்த பாராட்டு..

சென்னை மாநகரில் காவல் பணியில் இருக்கும் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அபாய கட்டத்திலிருந்து மீள "ஆக்டெம்ரா"(Actemra intravenous solution) என்கிற மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஒரு தடுப்பு ஊசியின் விலை 75 ஆயிரம் என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பு ஊசி செலுத்த வேண்டும்.(2.25லட்சம்) விலை அதிகமுள்ள அந்த மருந்துக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், தகவலறிந்த சென்னை காவல் ஆணையர் முனைவர்.ஏ.கே.விஸ்வநாதன் IPS அவர்கள் தனது சொந்த முயற்சியால் மருந்தினை ஏற்பாடு செய்து ஆய்வாளரின் அபாய கட்ட நிலையை போக்கினார். இதுகுறித்து காவல் ஆணையர்க்கு காவல்துறை வட்டாரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

1 / 1

1.