Social responsibility in police duty - Sub Inspector Manogar

Police Magazine(TamilNews Media Group): இராயபுரம் பகுதியில் காவல் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர் மனோகர் தொடர்ந்து காவல் கடமையோடு சமூக பொறுப்பையும் ஆற்றி வருவது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று. இரவு ரோந்து பணியில் இருக்கும் தருணத்தில் கழுத்தில் பெல்ட் அணிந்த வீட்டு நாய் ஒன்று சுற்றித்திரிந்ததை கண்ட மனோகர் அந்த நாயைப் உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அங்கிருக்கும் புறக்காவல் நிலையம் அருகே கட்டிவைத்துவிட்டு, யாரேனும் தேடிவருகிறார்களா என்று ரோந்து பணியின்போது கண்காணித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் உரியவர்கள் நாயை தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு புறக்காவல் நிலையத்தில் கட்டிவைத்த நாயை உரியவரிடம் ஒப்படைத்தார். மேலும் சமீபத்தில் இரவு நேரத்தில் விடாது கொட்டித்தீர்த்த மழையால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. "சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற முதலில் கார்ப்பரேஷன் முன் வருகிறதோ இல்லையோ காவல்துறை முன்வருகிறது" அந்த வகையில் பணியின்போது மனோகர் காவல் கட்டுப்பாட்டின் தகவல்களை விடாமல் அறிவதற்காக ஒரு கையில் வாக்கி டாக்கி வைத்துக்கொண்டு, மறுபக்கம் தேங்கிய தண்ணீரை அகற்றும் செயல் காவல்துறையின் மதிக்கத்தக்க செயலை உணர்த்துகிறது. என்னேரமும் ஏதாவது ஒரு காரணத்தை கொண்டு காவல்துறையை திட்டித் தீர்க்கும் கூட்டங்கள் இந்த காட்சிகளையும் சற்று உற்று நோக்க வேண்டும் என்பதை "போலீஸ் மேகஸின்" வலியுறுத்துகிறது..

1 / 1

1.