ஆசிரியை நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து நேரில் சந்தித்து ஆறுதல் டிஜிபி திரு.சைலேந்திரபாபு

தமிழக ரயில்வே மற்றும் தீயணைப்பு துறை டிஜிபி திரு.சைலேந்திரபாபு அவர்கள் குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள விளவங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் பயின்றவர். தனது பள்ளியில் தனக்கு பாடம் கற்பித்த "சதானந்தவல்லி" என்கிற ஆசிரியை நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் தனது சமூக வலைதளத்தில் "ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி. பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். உங்களை மறக்க முடியாது" என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது

1 / 1

1.