உயிர் கொடுத்த காவலர் பிரபுவுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வண்ணாங்கோவில் என்ற இடத்தில் மனைவி மற்றும் பேரனுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முதியவர் மீது ஜீப் மோதி மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் ஓடிவந்து பார்த்தபோது பாட்டியும் பேரனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பித்தனர். முதியவர் மட்டும் அசைவே இல்லாமல் கிடந்தார் அவர் இறந்து விட்டதாக அருகாமையில் இருந்த மக்கள் நினைத்தனர். அந்நேரத்தில் அவ்வழியில் ரோந்து பணியில் வந்த காவலர் பிரபு அசைவில்லாமல் கிடந்த முதியவரை நாடித் துடிப்பை பார்த்து உயிர் இருப்பதாக உறுதி செய்தார். பின்பு அவரே முதியவருக்கு செயற்கை சுவாசம் அளித்து முதியவரை காப்பாற்ற முயற்சி செய்தார். சிறிது நேரம் கழித்து முதியவர் கண்விழித்தார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து உயிர் கொடுத்த காவலர் பிரபுவுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் "திரு.ஜியாவுல் ஹக் IPS" அவர்கள் வெகுமதியும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

1 / 1

1.