மனிதநேயமிக்க ஆய்வாளருக்கு இணை கமிஷனர் முன்னிலையில் போலீஸ் மேகஸின் சார்பாக பாராட்டு..

வீட்டில் வறுமை தந்தையோ குடிகாரர், தாய் கூலி வேலை செய்பவர் இந்த சூழ்நிலையில் பள்ளி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தும் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போனை திருட முயற்சித்த சிறுவனை கண்டித்து வழக்குப்பதிவு செய்யாமல் மனிதநேயத்துடன் அந்த சிறுவனை அரவணைத்து அறிவுரை கூறி அவனுடைய பின் வாழ்வை எண்ணி திருவெற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் 10ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி அதை சென்னை வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் IPS மற்றும் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி இருவர் முன்னிலையிலும் அந்த சிறுவன் படிப்பிற்காக அர்ப்பணித்தார். காவல் பணியில் மனிதநேயமிக்க இந்த செயலை கௌரவிக்கும் பொருட்டு தமிழ் நியூஸ் போலீஸ் மேகஸின் சார்பாக அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய இணை செயலாளர் தமிழ் நியூஸ் போலீஸ் மேகஸின் ஆசிரியர் பூவே.இராஜசேகரன், திருவள்ளூர் மாவட்ட நிருபர் பிரபாகர், செங்கல்பட்டு மாவட்ட நிருபர் முரளி ஆகியோர் இணை ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழும் பாராட்டும் வகையில் வழங்கினர். இந்த செயலுக்காக தமிழ் நியூஸ் போலீஸ் மேகஸின் குழுவை இணை ஆணையாளர் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது..

3 / 4

3.

Previous Next