தமிழக காவல்துறையில் ஒருவர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு

Police Magazine(TamilNews Media Group): சென்னை ஆயுதப்படை காவலர், தமிழ்நாடு தடகள வீரர் நாகநாதன் பாண்டி இந்திய வீரர்களுக்கான தகுதி நுழைவு தேர்வில் தேர்வாகி கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள இந்திய தடகள கூட்டமைப்பின் தலைமையிடத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி தேர்வு போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் போட்டியின் தடகள போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகினார். வருகிற 23.7.2021 அன்று ஜப்பான் தலைநகர் டோக்யோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியின் தடகள போட்டியில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்க உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கங்கள் பெற்று, இந்தியாவுக்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக டிஜிபி முனைவர் திரு.சைலேந்திரபாபு IPS அவர்கள் பாராட்டி, தமிழக காவல்துறை சார்பாக நாகநாதன் பெற்றோர்களிடம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

1 / 1

1.